ஆவேச வசனம் தேவையில்லை, ராஜினாமாவோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் - சி.ஆர். சரஸ்வதி
நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாமே என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசியது குறித்து டிடிவி.தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது : ஆவேசமான வசனம் பேசுவதைவிட, ராஜினாமா செய்யலாம். அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.

மத்திய அரசோடு கைகோர்த்துக் கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதெல்லாம் மத்திய அரசுடன் இணைந்து கொண்டு நடத்தும் நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று சந்திரபாபு நாயுடு நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அதைப் போலவே தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.
நாளைக்குள் கெடு முடியும் நேரத்தில் உணர்ச்சிவசமாக பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுத்ததற்கு நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள், மக்கள் பிரச்னைக்காக நீதிமன்றத்திடம் முறையிடலாமே.
ஜெயலலிதாவை விட ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த சட்டநடவடிக்கையும் எடுத்துவிடவில்லை. நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications