இனி எல்லாம் இப்படித்தான்..? குப்பையில் வீசப்பட்டது ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள்!
ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை சசிகலாவின் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இதனைக் கண்டு அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன. சசிகலா புதிய பொதுச்செயலளாராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளனர்.
சிறந்த ஆளுமை, துணிச்சல் மிக்க பெண்மணி என்ற பெருமைக்கெல்லாம் பெயர் போனவர் மறைந்த முதல்வர் ஜெயலிதா. ஜெயலலிதா கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜெயலலிதா அடிமட்ட தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் என கூறப்படுவதுண்டு. அவராலேயே பலர் இன்று அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவை மறந்த நிர்வாகிகள்
ஆனால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட பலர் இன்று அவரையே மறந்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து துதி பாடி வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவரது படம் போட்ட காலண்டர்களை அச்சிட்டு விநியோகிக்க அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போட்டி போடுவர்.

ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் ரத்து
ஆனால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் அவரது படம் போட்டு சிவகாசியில், காலண்டர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் ஆர்டரை உடனடியாக ரத்து செய்தனர்.

குப்பையில் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள்
மேலும் சசிகலா படத்துடன் காலண்டர் தயாரிக்கவும் அவர்கள் ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் ரத்து செய்ய முடியாமல் போனதால் அவரது படம் போட்ட காலண்டர்கள் தற்போது கட்டுக்கட்டாக குப்பையில் வீசியெறியப்பட்டுள்ளன.

அடிமட்ட தொண்டர்கள் வேதனை
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே மறந்து அவரது படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications