ரூ.2000ஐ ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லலாமா? ஏற்றுக்கொள்வார்களா? அமைச்சர் சொன்ன பரபர பதில்
சென்னை: ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுமா என்று அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
2000 ரூபாய் திரும்ப பெறப்பட்டது: வங்கிகளில் 2000 ரூபாய்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ளவர்கள் பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.
அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரேஷன் கடைகள்:இதையடுத்து அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் சில ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் வாங்குவது இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக மக்கள் பொருட்கள் வாங்கிய பின் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதை அதிகாரிகள் வாங்குவது இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். ரேஷன் கடைகளில் எப்போதும் போல 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும்.
அதில் மாற்றம் இருக்க கூடாது. செப்டம்பர் 30ம் தேதி வரை இதற்காக காலம் இருக்கிறது. அதுவரை இந்த ரூபாய் செல்லும் என்பதால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது அறிவிப்பு வெளியிடப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகள் உண்மை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள பல்வேறு நகை கடைகள் அதிக அளவில் தங்கங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், நகை கடைகளுக்கு நகை விற்பனை செய்யும் டீலர்களிடம் இருந்தும் இவர்கள் நகைகளை வாங்கி உள்ளனர்.
மக்கள் பலர் பயந்து கொண்டு நகைகளை வாங்குவார்கள் என்பதால் ஸ்டாக் வைத்துக்கொள்ள இப்படி இந்திய நகை கடைகள் நகைகளை கூடுதலாக வாங்கி வைத்துள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது காணப்பட்ட சூழ்நிலையைப் போல இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications