வேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ

புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள ஓப்போ எஃப்9 புரோ மொபைல் இந்த மாதம் 31ம் தேதியில் இருந்து கடைகளில் கிடைக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள ஓப்போ எஃப்9 புரோ மொபைல் இந்த மாதம் 31ம் தேதியில் இருந்து கடைகளில் கிடைக்கும். இணையதளத்தில் ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இப்போது எல்லாம் ஸ்மார்ட்போன்கள், எல்லா விதமான பணிகளை செய்யவும் பயன்படுகிறது. நம்முடைய விரல் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்றபடி ஆடுகிறது. புதுப்புது தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட்போன்களை மேலும் ''ஸ்மார்ட்''போன்களாக மாற்றி வருகிறது. இப்போதெல்லாம், மிகவும் மெலிதான, அழகான அதிக செயல்திறன் கொண்ட போன்களையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

 Can You Charge Your Phone Any Faster Than The OPPO F9 Pro?

இதன் காரணமாகவே, இப்போதெல்லாம் போன்களில் அதிக அளவில் சார்ஜ் நிற்பதில்லை. ஒருநாளில் ஒருமுறையாவது தொடர்ந்து சார்ஜ் போட வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் சமூக வலைத்தளங்கள், கேம்கள், போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது, பாடல் கேட்பது எல்லாம் இன்னும் பேட்டரியை வேகமாக கரைய வைக்கிறது. இந்த நாட்கள் தற்போது முடிவுக்கு வர உள்ளது. ஓப்போவின் ஓப்போ எஃப்9 புரோ மிக வேகமாக சார்ஜ் ஏறும் திறனும், அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் திறனும் கொண்டுள்ளது. இதில் இருக்கும் விஓஓசி சார்ஜ் தொழில்நுட்பம் மூலம், 5 நிமிடம் சார்ஜ் ஏற்றிவிட்டு ஓப்போ எஃப்9 புரோவில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேச முடியும்.

இதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? விஓஓசி சார்ஜ் தொழில்நுட்பம் என்பது வேகமாக சார்ஜ் ஏற மட்டும் உதவுவதில்லை. இதன் மூலம், போனையும் பாதுகாக்கலாம். ஆம், இதன் மொபைல் போன் அதிக நேரம் சார்ஜ் ஆனாலும் கூட சூடாகாது. இதில் இருக்கும் 3500எம்ஏஎச் பேட்டரில் எந்த நிலையிலும் சூடாகி போனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 Can You Charge Your Phone Any Faster Than The OPPO F9 Pro?

ஓப்போ எஃப்9 புரோ இந்த மாதம் வெளியாக உள்ளது. ஆனால் வெளியாகும் முன்பு அதன் தனித்த ஸ்லீக் மற்றும் எட்ஜ்-டு-எட்ஜ் லுக் காரணமாக உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. இதன் ஸ்கிரீன் 90.8 ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ கொண்டுள்ளது. இந்த தலைமுறையை கவரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 6.3இன்ச் ஸ்கிரீன் மூலம், 2340×1080 பிக்சல் ரெஸலுசனில் மிகவும் தெளிவாக பார்க்க முடியும்.

இதில் உள்ள ஸ்டேட் ஆப் ஆர்ட் கேமரா இன்னும் அதிக வசதிகளை கொண்டுள்ளது. ஓப்போ எஃப்9 புரோ ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. இதில் உள்ள 16 எம்பி கேரமாவில் எஃப்/1.8 அபெர்சர் உள்ளது. அதெப்பில் 2 எம்பி இரண்டாவது சென்சாரும் உள்ளது. இதன் மூலம் இதில் உள்ள ஏஐ தொழில்நுட்பம் மிகவும் அழகாக படங்களை பிடிக்க முடியும். இதில் 6ஜிபி ராமும் 64ஜிபி ரோமும் உள்ளது. இதனால் இது மிகவும் சிறப்பாக இயங்குகிறது. இதில் உள்ள The MediaTek Helio P60 processor இதை இன்னும் சிறப்பாக இயங்க வைக்கிறது.

 Can You Charge Your Phone Any Faster Than The OPPO F9 Pro?

அதே சமயம் ஓப்போ எஃப்9 புரோ மிகவும் சிறந்த லுக்கை கொண்டுள்ளது, முக்கியமாக இதன் வெளிப்புற தோற்றம் அதிக வைரலாகி உள்ளது. ஓப்போ எஃப்9 புரோ ஸ்டாரி பர்பிள், சன்ரைஸ் ரெட், டுவைலைட் ப்ளூ ஆகிய வண்ணத்தில் வருகிறது. முக்கியமாக பர்பிள் வானத்தை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமாக உள்ளது. ஓப்போ எஃப்9 புரோவின் நிறத்தை பார்த்து அசந்து போன மனிஷ் அரோரா என்ற பேஷன் துறை வல்லுநர் இதற்கு தோதான உடைகளை உருவாக்கும் எண்ணத்தில் உள்ளார்.

 Can You Charge Your Phone Any Faster Than The OPPO F9 Pro?

ஓப்போவின் மற்ற மாடல்களை போலவே ஓப்போ எஃப்9 புரோவும் கேமரா தொடங்கி சார்ஜர் வரை அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் ஓப்போவின் மிக முக்கியமான வெளியீடாக பார்க்கக்கப்படுகிறது. இதுகுறித்த தொழில்நுட்பம் கடந்த 21ம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் 31ம் தேதியில் இருந்து கடைகளில் கிடைக்கும். எல்லா வசதியும் சரியான விதத்தில் கலந்து சிறப்பாக வெளியாகி உள்ளது ஓப்போ எஃப்9 புரோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+