ரயில்வே தேர்வில் முறைகேடுகள்... ஜூலை 2-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் - வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 2ம் தேதி ஐ.சி.எப்.- தென்மண்டல ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், 2014-ம் ஆண்டு ரயில்வே துறை தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Cancel 2014 railway exam: Velmurugan

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரயில்வே துறை என்பது ஏதோ வட இந்தியர்களுக்கே மட்டுமே சொந்தமானது என்பதைப் போல அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 2-ந் தேதியன்று சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

கோரிக்கைகள்:

  • தென்மண்டல ரயில்வே துறை மற்றும் ஐ.சி.எப். நிறுவனத்தில் 5,500 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் பல்வேறு காரணங்களின் பெயரில் 2,27,00 தமிழர் விண்ணப்பங்கள் முறைகேடாக நிராகரிக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வெளியேற்றப்பட்டு 90% வடமாநிலத்தவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடான தேர்வின் மூலமான நியமனத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயிற்சி பணி முடித்த மாணவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்.
  • பயிற்சி பணி முடித்த 6 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வரை ரயில்வே துறை ஆர்.ஆர்.சி. தேர்வை நடத்தக் கூடாது. இந்த மாணவர்களை பணியில் அமர்த்தலாம் என்ற பாஸ்ட் டிராக் கமிட்டி அறிக்கையை உடனே செயல்படுத்த வேண்டும்.
  • 1998ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பயிற்சி பணி முடித்து வேலைக்கால காத்திருப்போரின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்.
  • தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும்.
  • இந்திய அரசு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட- பழங்குடியின- பிற்படுத்தப்பட்டவருக்கான ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்து
  • ரயில்வே துறை தேர்வுகளில் வடமாநிலத்தவரே முறைகேடாக நியமனம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இத்தகைய தேர்வுகளை நடத்த வேண்டும்.
  • ரயில்வே துறை மற்றும் ஐ.சி.எப். ஆகியவற்றில் இந்த மண்ணின் மைந்தர்களுக்கே ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும்
  • தமிழ்நாட்டுக்குள் இயங்கும் ரயில்வே துறையை தமிழ்நாடு அரசுக்கே உரிமையாக்கிட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 2-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்கு ஐ.சி.எப்.- தென்மண்ட ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழர் எழுச்சி இயக்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது.

இப்போராட்டத்தில் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து தமிழர்களும் தமிழர்தம் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+