Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை நிகழ்ச்சிகளை கேப்டன் டிவியில் ஒளிபரப்ப ரெடி.. கோர்ட்டுக்குப் போன விஜயகாந்த்- மனு நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரிய வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை பொதுமக்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விதமாக, டி.வி. சேனல்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டி.ஜெகதீஸ்வரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Captain TV is ready to telecast assembly session, says Vijayakanth

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் சட்டசபை நிகழ்வுகளை டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தமிழக அரசு, 'நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்றால் பெரும் தொகை செலவு செய்யவேண்டியது வரும். தமிழக அரசின் நிதி நிலை தற்போது சரியில்லை' என்று பதிலளித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழக சட்டசபையில் ஏற்கனவே வீடியோ கேமிராக்கள் பொருத்தப்பட்டு, படம் பிடிக்கப்படுகிறது. பின்னர் அந்த வீடியோ படம் தணிக்கை செய்து, தனியார் டி.வி. சேனல்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், நேரடி ஒளிப்பரப்பு செய்ய பணம் இல்லை என்று கூறும் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக விளம்பரத்துக்கு ரூ.55 கோடி செலவு செய்துள்ளது.

சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக டி.வி. சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும். தற்போது அரசு நிதி நிலை சரியில்லை என்று சொல்வதால், எனக்கு சொந்தமான 'கேப்டன்' டி.வி.யில் தமிழ சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய தயாராக உள்ளேன். இதற்காக தமிழக அரசு எந்த பணமும் தரவேண்டியது இல்லை. இலவசமாகவே இந்த சேவையை வழங்க தயாராக உள்ளேன்.

கர்நாடகா மாநில சட்டசபை நிகழ்வுகளை தனியார் டி.வி. சேனல்கள் நேரடியாக ஒளிப்பரப்ப அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. விஜயகாந்தின் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், சிவஞானம் அமர்வு மறுத்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+