காட்பாடி அருகே கோரவிபத்து.. லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காட்பாடி: காட்பாடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடியை அடுத்த சையனம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாதனூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த குமார், மனைவி எஸ்தர் ராணி 50, மகன் கார்த்தி 30, மற்றும் உறவினர்களுடன் மாதனூருக்கு தனது காரில் இன்று மாலை திரும்பி கொண்டிருந்தார். காரை குமார்தான் ஓட்டியுள்ளார்.

சேர்க்காடு கூட்டுசாலை அருகே கார் வந்துகொண்டிருந்தது. அங்கே சாலை ஓரம் ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிமாக கார் நிலைதடுமாறி லாரியின் மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலமாக நொறுங்கியது. இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த குமார், மனைவி எஸ்தர்ராணி, மகன் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் அவர்களுடன் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்கள் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இந்த கோர விபத்து குறித்து மேல்மாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications