Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்- வீடியோ

    திண்டிவனம்: திண்டிவனம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் மூக்கையா தேவர். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களது மகன் விஜயகுமார். இவருக்கு சபரி என்பவருடன் திருமணமாகி 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் அந்த குழந்தைக்கு திண்டிவனம் அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் காது குத்தி மொட்டை அடித்து விட்டு காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    Car hits on lorry leads to kill 3 near Tindivanam

    காரை குன்றத்தூரைச் சேர்ந்த அருண் ஓட்டி வந்தார். சாரம் அருகே கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது.

    இதில் கார் உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமலட்சுமி, விஜயகுமார், சபரி ஆகியோர் பலியாகிவிட்டனர். காயமடைந்த அருண் உள்பட 3 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் விஜயகுமாரின் குழந்தை காயமின்றி உயிர் தப்பியது. தற்போது விபத்தில் தாய், தந்தை, பாட்டியை இழந்ததால் பரிதாப நிலையில் குழந்தை உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+