நாட்டிலேயே முதல் முறை.. தமிழக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டு முகாம்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில், 'கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்' என்ற பெயரில் தமிழக அரசு கவுன்சலிங் வழங்க உள்ளது.
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டும் முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கல்வியிலும், சமூக விழிப்புணர்விலும் தமிழகம் நாட்டிலேயே முதல் மாநிலமாக வருவதற்கு, புரட்சி தலைவி அம்மா காட்டிய வழியில் இந்த அரசு செயல்படும். அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பாக பொதுத்தேர்வு தேர்வு எழுத வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில், 'கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்' என்ற பெயரில் கவுன்சலிங் தர உள்ளோம்.
32 மாவட்ட தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என மாநிலம் முழுக்க மொத்தம், 541 இடங்களில் இதை நடத்த உள்ளோம். பங்கேற்க வரும் மாணவர்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு, குடிநீர் வசதி செய்து தருவார்கள்.
ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். ஏதாவது ஒருநாளில் மாணவர்கள் வசதிக்கேற்ப கலந்து கொள்ளலாம். மேல்நிலைப்பள்ளிகளில் இந்த கேம்ப் நடைபெறும். அறிவியல், பொறியியல், பொதுத்துறை நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்படும். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவருகிறோம்.
அம்மா வழியில் நடைபெறும் இந்த ஆட்சி, சிறப்பான வகையில் மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றார் செங்கோட்டையன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications