”இனி டென்ஷன் வேண்டாம்”- பிரகாஷ் ராஜ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் விளம்பரதாரர்களையும் மனுதாரர்களாக சேர்க்காத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் நகைக் கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில், திருமண வயதில் உள்ள பெண்களால் தந்தைகளுக்கு "டென்ஷன்" என்று வசனம் இடம்பெற்றுள்ளது. இது, பெண் பிள்ளைகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த விளம்பரத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பான விளம்பரப் பலகைகளை அகற்றவும், பெண்களை இழிவுபடுத்திய பிரகாஷ்ராஜ், சம்பந்தப்பட்ட நகைக் கடை நிர்வாகம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘'இந்த வழக்கை தொடர்வதற்கு முன்பு, விளம்பரத்தை தயாரித்து வெளியிட்ட விளம்பர நிறுவனம், நகைக் கடை நிர்வாகம் ஆகியோருக்கு மனுதாரர் நோட்டீஸ் அனுப்பவில்லை.
அவர்களை எதிர்மனுதாரர்களாகவும் சேர்க்கவில்லை. நடிகர் என்பதால் பிரகாஷ்ராஜ் மட்டும் இந்த வழக்கில் முதல் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்'' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications