அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு
அதிமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகர் உள்பட 50 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று தகவல் வெளியானது.

இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அப்போது தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பாவின் கணவரும் தாக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் உள்பட 50 பேர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக பிரமுகர் சிந்துரவி என்பவர் அளித்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகர் உள்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications