144 தடையை மீறி தூத்துக்குடி மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்... ஸ்டாலின், கமல் மீது வழக்கு

144 தடையை மீறி தூத்துக்குடி மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    144 தடையை மீறி பார்த்து ஆறுதல் கூறிய ஸ்டாலின் கமல் மீது வழக்கு- வீடியோ

    தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளவர்களை 144 தடையை மீறி பார்த்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், திருமாவளவன், கமல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    Case filed against the leaders who had gone to Tuticorin GH

    காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் வரை 144 உத்தரவு தொடரும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்றே அறிவித்திருந்தது.

    இந்நிலையில் காயமடைந்தவர்களை ஸ்டாலின், கமல்ஹாசன், டி ராஜேந்தர், முத்தரசன், கே பாலகிருஷ்ணன், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 144 தடையை மீறி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தலைவர்கள் சென்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாங்கள் சந்திக்க தயார் என்று முத்தரசன், ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+