நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு
தமிழக மீனவரை நடுக்கடலில் சுட்டுக் கொன்ற இலங்கை படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரும்: தமிழக மீனவரை நடுக்கடலில் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது மண்டபம் கடலோர காவல் படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதம்பாலம் என்ற பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு இரவோடு இரவாக மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.
பிரிட்ஜோவின் உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி முடித்தது. பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவுடன் சென்ற அருள் கிளிண்டன் என்பவர் மண்டபம் கடலோர காவல் படையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது மண்டபம் கடலோர காவல் படை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications