காவிரி: மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகத்தில் வெடித்தது போராட்டம்- மோடி கொடும்பாவி எரிப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
காவிரி பிரச்சனை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு கர்நாடகத்திற்கு சார்பாகவே நடந்து கொண்டு வந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு மேல் மத்திய அரசால் இந்த பிரச்சனையில் ஒன்றும் விளையாட முடியாது என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தடாலடியாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என்று விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மோடிக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் எதிரில் ஒன்று கூடி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போன்று திருத்துறைப் பூண்டியிலும் மோடியின் உருவபொம்மையை விவசாயிகள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications