For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவை உடனே ரிலீஸ் செய்ய சொன்ன அந்த 4 டிஎம்சி தண்ணீர் என்ன ஆச்சு?

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ

    டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. 4 டிஎம்சி கொடுக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இன்று அது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

    Cauvery: SC havent discussed anything on 4 TMC water issue, upsets TN

    இன்றைய விசாரணையில் எப்போதும் போல தமிழகத்தை வஞ்சித்து மத்திய அரசு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும், மே 14ம் தேதி அன்று வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவகாசம் கொடுத்துள்ளது.

    கடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

    ஆனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றம்தான் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. எனவே, இன்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நெருக்கடி தரும் என தமிழகம் எதிர்பார்த்தது. அப்படி எதுவும் நடக்வில்லை.

    தமிழக அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் தமிழக தரப்பு இன்னும் அழுத்தமாக வாதம் முன்வைத்து உரிமையை வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கருத்தாக உள்ளது.

    English summary
    Cauvery: SC haven't discussed anything on 4 TMC water issue, upsets TN. Previously Karnataka said that they can't give 4 TMC water to Tamil Nadu. Few days ago Supreme Court has ordered that Karnataka has to open 4 TMC water to Tamil Nadu for this month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X