For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா-தமிழகம் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது!

காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் கர்நாடகா செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி தீர்ப்பு : இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு- வீடியோ

    ஓசூர்: கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. காவிரி தீர்ப்பையொட்டி எல்லையில் இரு மாநில பஸ்களும் காலையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

    காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டது.

    Cauvery Verdict: TN Govt Buses cancel to Karnataka

    இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு நகரங்களில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    சென்னை, கோவை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓசூரில் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வந்தது.

    அத்திபலேவுடன் கர்நாடக பேருந்துகள் நிறுத்தம் அதேபோல பெங்களூரிலிருந்து வரும் பேருந்துகள் அந்த மாநில எல்லையான அத்திபலேவுடன் நிறுத்தப்பட்டது அதேசமயம், கர்நாடக அரசுப் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Cauvery Verdict: TN Govt Buses cancel to Karnataka

    இந்த நிலையில் தீர்ப்பிற்கு பின் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. இரண்டு மாநிலங்களிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இதனால் தற்போது மீண்டும் பேருந்துகள் இயங்கத் தொடங்கி இருக்கிறது. எல்லையில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

    English summary
    Tamilnadu Buses cancelled to Karnataka and stopped at Hosur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X