Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை- சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்ஹா விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்ஹா இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். எழும்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணம் கொள்ளை போன ரயில் பெட்டியில் சோதனை நடத்திய அவர், பார்சல் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டார்.

ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சேலம் ரயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குனர் எஸ்.கே.பகத், ஜ.ஜி.பாரி ஆகியோர் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலத்தில் இருந்து கடந்த 8ம் தேதி இரவு சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கி பணத்தை கொண்டு வருவதற்காக தனிப்பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெட்டியின் மேற்கூரையில் ஓட்டை போட்டு ரூ. 5.75 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

CB-CID to probe train heist case - ADGP Karan Sinha investigation

நாட்டில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கூரையில் துளைபோட்டு கொள்ளைடித்த சம்பவம் இது என்பதால் ரயில்வே போலீஸ் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் ரயில்வே போலீசார் திணறிய நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் ரயிலின் மேற்கூரை எப்படி வெட்டியெடுக்கப்பட்டது என்று ஆய்வு நடைபெறுகிறது.

கொள்ளை நடந்த ரயில் பெட்டி 2008ம் ஆண்டு சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில்(ஐசிஎப்) தயாரிக்கப்பட்டது. வழக்கமாக ரயில் பெட்டி கூரைகளில் கார்ட்டன் ஸ்டீல் வகை 1.6மிமீ தடிமன் கொண்ட இரும்பு தகடு பொருத்தப்படும். தடிமன் குறைவாக இருந்தாலும் உறுதியானது.

அதேபோல் உட்பக்கத்தில் லிம்பர்ட் ஷீட் எனப்படும் கல்நார் தகடுகள்(ஆஸ்பெஸ்டாஸ் ஓடு) பொருத்தப்படும். மேலும் இந்த 2 தகடுகளுக்கு இடையே கண்ணாடி இழை கம்பளி(கிளாஸ் உல்) விரிவுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வெப்பம் உள்ளே பரவுவதை தடுக்கும். ஆனால் கொள்ளை நடந்த பெட்டியில் உட்பக்கத்தில் கல்நார் தகடுகளுக்கு பதில் சாதாரண வகை இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை கல்நார் தகடுகளை விட உறுதியானது.

CB-CID to probe train heist case - ADGP Karan Sinha investigation

வெல்டிங் வைத்து துளை போட்டிருந்தால் கண்ணாடி இழை கம்பளி புகைய ஆரம்பித்திருக்கும். பின்னர் தீயாக பரவவும் வாய்ப்பு உள்ளதாம். அதனால்தான் கொள்ளையர்கள் இரும்பு உளி, இரும்பு தகடு வெட்டி, சுத்தியல் போன்ற சாதாரணமான பொருட்களை துளை போட பயன்படுத்தியுள்ளனர்.

ரயில்வே பாதுகாப்பு படையிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக இருப்பதால் உள்ளூர் ஆட்களை போல் இல்லாமல் ரயில்நிலையத்தின் எந்தப்பகுதிக்கும் இலகுவாக சென்று வர முடியும். எனவே அவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

ரயில்பாதையோரம் உள்ள கிராமங்களில், குடியிருப்பு பகுதிகளிலும் தனிப்படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆக.8ம் தேதி சந்தேகப்படும்படியான ஆட்களின் நடமாட்டம் இருந்ததா என்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள செல்போன் டவர்களில் பதிவான ஒரே எண்கள் எத்தனை என்ற விவரங்களையும் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளை நடந்த ரயில் பெட்டி சேலம் - சென்னை ரயிலில் இணைப்பதற்கு முன்பே கொள்ளை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
மேலும் துளையை பார்க்கும்போது பெட்டியின் உட்பக்கத்தில் இருந்து துளை போட்டிருக்க முடியாது என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக போலீசார் இதுவரை பார்த்திராத, ஏன் கேட்டிராத வகையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற விசாரணையில், கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து கூட தடயங்கள் சிக்கவில்லை.

இந்த தடயங்கள் கிடைத்த பிறகுதான், கொள்ளையர்கள் யார் என்ற அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும். இந்நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.

ரிசர்வ் வங்கி அனுப்பிய ரூ.342 கோடி பணம், 226 பெட்டிகளில் வைத்து கொண்டு செல்லப்பட்டது. இதன் மொத்த எடை 23 டன் ஆகும். தற்ேபாது கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணம் சுமார் 200 கிலோ வரை இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கார் மூலம் கொண்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே ஏற்கனவே ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட, கும்பல் பட்டியல் எடுத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரன்சின்ஹா ஆய்வு

இதனிடையே சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்ஹா இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போன பெட்டியை ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்திலும் அவர் விசாரணை மேற்கொண்டு தகவல்களை கேட்டறிந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+