இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
சென்னை: கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர், கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க, டி.ஐ.ஜி நாகராஜ் தலைமையில், 3 எஸ்.பி., 6 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், சென்னை ஐ.டி பொறியாளர் சுவாதி கொலை வழக்கு பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்களின் முகம், அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அத்துடன், சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற சில பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பைக்கில் தப்பிய 4 பேரையும் சிலர் நேரடியாக பார்த்ததாக கூறியுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீசார், புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சசிகுமார் பயன்படுத்திய மொபைல் போன், தனிப்படை வசம் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், செல்போன் அழைப்பு விவரங்களை சைபர் கிரைம் போலீசார் அலசி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஏற்பட்ட மோதல், தகராறில் தொடர்புடைய நபர்கள், கோவை நகர், புறநகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சசிகுமார் கொலை வழக்கில் தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சசிகுமார் கொலை வழக்கில் பாகிஸ்தான் சதி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். கோவையில் மதக்கலவரத்தை தூண்ட அந்நிய சக்திகள் சதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொலையாளிகள் சிக்குவார்களா?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications