டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கு- பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை!
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடலூரில் அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்: டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்சங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது.இதற்கு தடைவிதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் எஸ்பி பாலாஜி தலைமையில் இன்று விசாரணையை தொடங்கினர். கடலூர்-கோண்டூரில் உள்ள விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் இன்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை நீடிக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications