சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

CBI office gets hoax bomb threat call
சென்னை: சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள சிபிஐ அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், சாஸ்திரிபவன் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 3 சிபிஐ அலுவலகங்களில் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகம்தான், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.

குறிப்பாக முறைகேடாக சொகுசு கார்களை இறக்குமதி செய்ததது , பல் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது, தூத்துக்குடி துறைமுக அதிகாரி லஞ்சம் பெற்றது, போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+