ராமேஸ்வரம் ரயிலில் சிசிடிவி கேமரா... பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக தெற்கு ரயில்வே நடவடிக்கை!
சென்னை: ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதன் முறையாக சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் கொள்ளை, பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து சரியான ஆதாரங்கள் சிக்காத பட்சத்தில், குற்றவாளிகளைக் கைது செய்ய போலீசார் திணற வேண்டியுள்ளது.

எனவே, ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என முடிவு செய்யப் பட்டது.
இதன்படி, முதன் முறையாக சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமராவில் தெரியும் காட்சிகள் சென்னை ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள கம்ப் யூட்டருடன் இணைக்கப்பட்டு, பதிவும் செய்யப்படுகிறது.

இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தவுடன், அனைத்து ரயில்களிலும், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராப் பொருத்தப்படும் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் அசோக் குமார் அகர்வால் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications