குற்றாலத்தில் வளைத்து வளைத்து செல்போன் திருடிய நபர் கைது... 13 போன்கள் பறிமுதல்
குற்றாலம்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் செல்போன் தி்ருடிய நபரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 13 போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது குற்றாலம். அருவிகளின் நகரமான இப்பகுதியில் அருவிகளில் குளிக்கும் போது பெண்களிடம் தங்க சங்கிலியை பறிக்கும் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மேலும் சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை திருடும் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து குற்றாலத்தில் பொருத்தப்பட்டுள்ள 50 சி.சி.டி.வி.நவீன கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மெயின் அருவிப் பகுதியில் ஒருவர் கார்களில் கதவைத் திறந்து காரிலிருக்கும் பொருட்களை திருடுவதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டனர்.

உடனடியாக மப்டி உடையில் சென்ற போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த அயூப் என்பதும் அவர் சுற்றுலாத் தலங்களில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரிய வந்தது.
குற்றாலம் பகுதியில் கார்களில் கண்ணாடிகளை லாவகமாக திறந்து 13க்கும் மேற்பட்ட செல்போன்களை இந்த நபர் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 13 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications