ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செல்போன்களுக்கு தடை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போது கிளியும் மாலையும் செல்லும். அது போல் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு ஆண்டாளின் கிளி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்கள். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் , பழனி முருகன் கோயிலுக்களுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக செல்போன் பாதுகாப்பு அறை வைக்கப்பட்டுள்ளது. போன்களை இந்த பெட்டகத்தில் பக்தர்கள் வைத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வரும் போது செல்போனை டோக்கனை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு உள்ளேயும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக கோயில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை வைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொருவரும் ரூ 5 கட்டணம் செலுத்தி செல்போனை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வேண்டும். பின்னர் டோக்கனை கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம். இன்று குடியரசு தினத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications