வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறைந்த வட்டியில் கடன்: அருண் ஜெட்லி உறுதி
சென்னை: தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தமிழக வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்துள்ளார். இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற அருண் ஜெட்லி, அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக வெள்ள சேதம் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அருண் ஜெட்லி. அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் பெய்த கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காப்பீட்டு தொடர்பாக பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு 11,000 காப்பீட்டு முறையீடுகள் வந்துள்ளன. இந்த முறையீடுகளுக்கான காப்பீட்டு பலன்களை 4 வாரங்களுக்குள் அளிக்க பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். பிரதமரின் காப்பீடு திட்ட உறுப்பினர்களும் வெள்ள நிவாரண உதவிகளைப் பெறலாம்.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகளின் மூலம் உடனடி நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் சார்பாக அளிக்கப்படும் உதவிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து குழு அனுப்பப் படும்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications