காவிரி பிரச்சனையில் சாக்கு போக்கு சொல்லும் மத்திய அரசு... கமல் கடும் தாக்கு!
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசு மத்திய அரசின் எடுபுடியாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை வாசித்த அவர், பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போதே ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. கடந்த காலங்களைப் போல சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்து வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. அதே போல மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு என்று கூறினார் கமல்.
போலியாக உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது. வழக்குகளை மட்டுமே தொடர்ந்து விட்டு அதிமுக அரசால் கை கழுவி விட முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.
இன்றைய பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சினை பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் முக்கியமாக பேசப்படும் என்றும் அதிமுகவின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உண்ணாவிரதத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை 5 மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில், 8ஆம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications