பொங்கல் விடுமுறை.. மத்திய அரசு அறிவிப்பில் தவறில்லை.. திருமாவளவன் சொல்கிறார்
பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பத தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளில் பொங்கல் வருவதால் அதனை கட்டாய விடுமுறை என அறிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
சனி ஞாயிறு ஆகிய 2 நாட்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் அந்த விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக திங்கள்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அபேத்கர் பிறந்த நாளை கட்டாய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கூறிய திருமாவளவன் இதனை பாரதிய ஜனதா கட்சி முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications