காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் - தமிழக அரசு நம்பிக்கை
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழக பட்ஜெட்..விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் வாசித்து வருகிறார். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு ஏற்று செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஓபிஎஸ். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
கோடை காலத்திற்கு முன்பே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என்பதால் அதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications