தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் : திருநாவுக்கரசர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி 3ஆம் தேதி திமுக
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி 3ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வகின்றனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''தமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வரும் ஆண்டிலும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசின் துணையோடு தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். இச்செயலை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 11.07.2011-ல் வெளியிட்ட அறிவிக்கைதான் காரணம் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிகட்டு நடத்த வெறும் அறிவிக்கை வெளியிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகப்பெரிய வாய்பாக அமைந்திருக்கும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வரும் தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் திமுக சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர். ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications