மாணவர்களுக்கு போதிய வசதி உள்ளதா... நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மத்திய குழு ஆய்வு
நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு உரிய வசதிகள் உள்ளதா என மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி 32 ஆண்டுகள் பழமையானது. சித்த மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புக்கு இங்கு 100 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 இடங்களே உள்ளன. இது தவிர தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி யோகா போன்ற படிப்புகளுக்கு கல்லூரிகளிலும் நாகர்கோவில் கோட்டார், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.

இந்த கல்லூரிகளில் 2016-17 மாணவர்கள் சேர்க்கைக்காக கடந்த மாதம் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மட்டும் 800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் சேர்க்கைக்காக கலந்தாய்வு எப்போது நடக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் ஓவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக கல்லூரி பேராசிரியர் எண்ணிக்கை, வகுப்பறை எண்ணிக்கை. போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்வர். ஆய்வுக்கு பினனர் அவர்கள் தரும் அறிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரப்படும்.
இந்த மத்திய குழுவினர் இன்று நெல்லை சித்த மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்வர். பின்னர் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications