தமிழக வெள்ள சேதம் : மத்திய குழுவின் 3 நாள் ஆய்வு நிறைவு - ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்
சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் மேற்கொண்ட 3 நாள் களஆய்வு இன்று நிறைவடைந்தது. வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இறுதியாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெய்த தொடர் கனமழையால் கடலோர மாவட்டங்களான கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி, மத்திய நிதி கோரியும், மத்திய குழுவை அனுப்புமாறும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 9 பேர் கொண்ட மத்திய குழு வினர் சென்னை வந்தனர்.

காஞ்சிபுரம், கடலூர்
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்பு தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர். பெரிய காட்டுப் பாளையத்தில் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அடித்துச் செல்லப்பட்ட இடத்தையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதங்களையும் பார்வையிட்டார்கள்.

வடசென்னையில் ஆய்வு
இன்று வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். முதலில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நிவாரண முகாம் சென்றனர். அங்கு வட சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

ஆர்.கே.நகர் தொகுதியில் பாதிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை பார்வையிடும் புகைப்படங்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்று இருந்தன. அவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அவர்களுக்கு தமிழக அதிகாரிகள் வெள்ள பாதிப்பு குறித்தும் அரசு துரிதமாக எடுத்த நடவடிக்கை குறித்தும் விளக்கி கூறினார்கள்.

குறைகேட்பு
நிவாரண முகாமில் தங்கி இருந்த பொது மக்களையும் மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் பற்றி கேட்டறிந்தனர். நிவாரண முகாமில் செயல்படும் மருத்துவ முகாமையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இளைய முதலி தெருவை பார்வையிட்டனர். வ.உ.சி. நகர் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் சென்று பார்வையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவொற்றியூர் கார்கில் நகர் சென்றனர். அங்கு திரண்டிருந்த மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு பற்றி கேட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட அவர்கள், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்
தமிழக அரசு கேட்டுக்கொண்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றதாக மத்திய ஆய்வுக்குழுவின் தலைவர் டி.வி.என்.எஸ் பிராத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்துள்ளதாக கூறிய அவர், வெள்ளபாதிப்பு குறித்து ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications