தமிழகத்தில் 90% கூடுதல் மழை பெய்யும் என மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் கண்டுகொள்ளாத ஜெ. அரசு?
சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 90 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆயவு துறை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்தும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் தான் இந்த விபரீதம் என்று கூறப்படுகிறது.
வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது. மழை காலம் என்று தெரிந்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தான் இந்த விபரீதம் என்று புகார் எழுந்துள்ளது.

அரசோ, எதிர்பார்க்காத வகையில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும், அதுவும் 111 சதவீதம் அதிகமாக பெய்யும்.

தமிழகத்தில் வழக்கத்தை விட 112 சதவீதம் கூடுதல் மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கூடுதலாக 90 சதவீதம் வரை மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி சென்னையைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறுகையில்,

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குகையில் இருந்த காரணிகளை ஆய்வு செய்கையில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யக்கூடும் என்பது தெரிய வந்தது. இது குறித்து ஊடகங்களில் அறிவித்தும் அதை ஆட்சியாளர்கள் எவ்வளவு முக்கியமாக கருதினார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
-
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
சென்னையில் இன்றும் விட்டு விளாசப் போகுது மழை.. இடி, மின்னலுடன் கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications