நாங்குநேரி சம்பவம்: நடந்தது என்ன? CEO தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு தகவல்! முக்கிய பரிந்துரைகள்
நெல்லை: நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் முக்கியமான சில பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் +2 மாணவர் சின்னதுரை, மற்றும் அவரது தங்கை ஆகியோர் சின்னதுரையின் சக மாணவர்களான சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய இந்தக் கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இனி இத்தகைய சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளது.
இதற்கிடையே நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு விசாரணை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் அவர் நடத்திய முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாதி ஆதிக்க மனோபாவத்துடன், மாணவரின் வீட்டில் புகுந்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர் என அந்த முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அறிக்கையுடன் சில பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 17 வயது மாணவர் சின்னதுரையை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலில் மாணவருடன் சேர்ந்து காயமடைந்த அவரது சகோதரியையும் இந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சாதி வெறி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சின்னதுரை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராகி வருபவர் என்பதால், அவரை மனதளவில் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications