அசத்தும் அக்னி வெயில்… தமிழகத்தில் இன்று மழை பெய்யுமாம்!
சென்னை: அக்னி நட்சத்திர வெயில் 100 டிகிரிக்கு மேல் வறுத்தெடுத்து வரும் நிலையில் தமிழகம்,புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஆறுதல் தகவல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். ஜூன், ஜூலையிலும் வெயில் வாட்டி வதைக்கும். இந்த வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோடையின் உச்சமான ‘அக்னி நட்சத்திரம்' நேற்று தொடங்கியது. சென்னையில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை படிப்படியாக வெயில் அதிகரித்து மதிய நேரத்தில் சுட்டெரித்தது. சாலைகளில் கானல் நீர் ஓடியது.
சதமடித்த வெயில்
அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் 94.28 டிகிரி வெயில் பதிவாகியது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 100.94 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
வெப்பச்சலனம்
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணிநேரத்தில் மழை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, தென்மேற்கு வங்க கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications