தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னைக்கு மேகமூட்டம் மட்டும் தான்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. ஒரு சில நகரங்களில் நேற்று சராசரியாக 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
இதனால் எப்போது தங்கள் பகுதிகளிலும் மழை பெய்து, வெப்பம் தணியும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மழை நிலவரம்...
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, நாகர்கோவில் 6 செ.மீ., தக்கலை 5 செ.மீ., குளச்சல் 4 செ.மீ., நடுவட்டம், பூதப்பாண்டி, குழித்துறை, மயிலாடி, கூடலூர் பஜார் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பதிவானது.

மேகமூட்டம்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சம் 82.4 டிகிரியும் வெப்பம் பதிவாக கூடும்.

வெப்பத்தின் தாக்கம்...
வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தரைகாற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசுகிறது.

கடல் காற்று...
அதேபோல் கடல் காற்றைப் பொருத்தவரையில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications