பேசாம விஜய் மல்லையா பேங்க்-ன்னு மாத்திடுங்க்க... சென்னையில் வக்கீல்கள் ஆவேசம்!
விஜய் மல்லையா கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை: தொழிலதிபர் விஜய் மல்லையா பெற்ற கடன்களை பாரத வங்கி தள்ளுபடி செய்ததைக் கண்டித்து சென்னையில் வக்கீல்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், நீதிமன்றத்துக்கு முன்பாக உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர்.

விஜ்ய் மல்லையாவுக்கு ஆதரவாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் பெயரை விஜய் மல்லையா வங்கி என பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் தெரிவித்தனர். மக்களுக்கு பணம் தராமல் பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்வதாகவும் குற்றம்சாட்டினர். வக்கீல்களின் இந்தப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதேபோல் சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை புரட்சிகர இளைஞர் கழகத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது வங்கிப் பலகை மீது மை வீசிய அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications