கலால் வரியை உயர்த்திய புதுச்சேரி அரசு.. விஸ்கி, பிராந்தி விலை விர்.. குடிமகன்கள் உர்..!
புதுச்சேரி அரசின் கலால் வரித்துறை திடீரென்று கலால் வரியை அதிகரித்துள்ளதால் மதுபான விலை உயர்ந்தது.
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலால் வரித்துறை திடீரென்று கலால் வரியை அந்த யூனியன் பிரதேசத்தில் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது . இதற்கான ஆணையை புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது திடீர் கலால் வரி உயர்வால் புதுச்சேரியில் விலைகள் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு மதுபானத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அதிகரிக்கப்பட்ட வரியுடன் புதிய விலை நிலவரம் புதுச்சேரி அரசாங்கத்தால் இன்று வெளியிடப்பட்டது. இது மதுபானப் பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைவான புதுச்சேரி
மதுபானங்களுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இவற்றை ருசித்து பார்க்க ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருப்பதால் புதுச்சேரிக்கு என்று தனி மதுபிரியர்கள் உள்ளனர். இங்கு மிகவும் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கலால் வரி
இந்த நிலையில் புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை உயர்த்தி இருக்கிறது. இதற்கான ஆணையை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டது. இதன்படி அனைத்து பொருட்களின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை கலால்வரி உயர்த்தப்பட்டு சீரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கலால் வரி சீரமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை நிலவரம்
இதனால் விஸ்கி, ரம், பிராந்தி போன்றவைகளை அடிப்படை விலையான ரூ. 68-ல் இருந்து ரூ.75க்கும், ரூ. 78-ல் இருந்து 90க்கும், ரூ. 85-ல் இருந்து 100-க்கும் உயர்த்தி உள்ளது. அதே போல் பீர் விலையை ரூ. 4.50ல் இருந்து ரூ.6-க்கும், ஓயின் விலையை ரூ. 15ல் இருந்து ரூ.20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரியால் ரூ. 2 முதல் 20 வரை மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. புதிய விலை பட்டியல் மதுபானகடைகளில் அமலுக்கு வந்துள்ளது.

விற்பனை குறையும்
திடீரென உயர்த்தப்பட்ட மதுபான விலையால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கலால்துறைவரி உயர்வு காரணமாக மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்படும் என்றும், வருடத்திற்கு 3 முறை கலால்வரி ஏற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications