செம்பரம்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் திறப்பு- அடையாறு கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் நிறைந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் அப்படியே மறுகாலாக திறந்து விடப்படுகிறது. இந்த ஏரி நீர் அடையாறு ஆற்றில் கலப்பதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிமங்கலம் ஏரி
இதேபோல் சென்னை புறநகரில் உள்ள மணிமங்கலம் ஏரியும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டு அதுவும் அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது.

இந்த ஏரியின் ஒரு பகுதியில் கரை உடைந்ததால் வண்டலூர்- ஒரகடம் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீரும் அடையாறில் வெள்ளமாக வெளியேறி வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சென்னையில் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்கனவே சென்னை அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் மற்றும் மணிமங்கலம் ஏரிகள் நீரும் திறந்துவிடப்படுகின்றன. இதனால் சென்னையில் அடையாறு கரையோர பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, போரூர், ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம், அடையாறு உள்ளிட்டவை தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் நிலை உருவாகி உள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications