பேருந்துப் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்.. மதுராந்தகம் அருகே சோகம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பேருந்துப் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூரில் தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணித்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
படியில் பயணம் நொடியில் மரணம் என்று எத்தனையோ முறை சொன்னாலும் அதை இந்த கால இளைஞர்கள் கேட்பதில்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பணிக்கு செல்லும் போதும் படியில் தொங்கியபடிதான் பயணம் செய்கின்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் பெயர் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் என்பதாகும். இன்று காலையில்
சென்னையின் புறநகர் பகுதியாக உள்ள செங்கல்பட்டு நோக்கி பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பேருந்துகளில் வந்து படித்து சொல்வது வழக்கம். அந்த வகையில் சூனாம்பேடு பகுதியில் இருந்து செங்கல்பட்டுக்கு தனியார் பேருந்து இயங்கி வருகிறது.
காலை நேரத்தில் இயங்கக்கூடிய இந்த பேருந்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். தனியார் பேருந்து என்பதால் எப்பொழுதும் அதிகளவு பயணிகளை ஏற்றியுள்ளனர். செங்கல்பட்டு நோக்கி மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது படிக்கட்டில் மாணவர்கள் சிலர் தொங்கி கொண்டு வந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்கு இடது புறம் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை, அதிவேகமாக சென்று வலது புறத்திலிருந்து முந்த முயற்சி செய்து, சிறுநாகலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக போடப்பட்ட திடீர் பிரேக் காரணமாக, படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் தங்களது பிடியை பிடிக்க முடியாமல் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில் மாணவர்களின் உடல் நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மற்றும் மற்றொரு மாணவன் ஆகியோரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்த்து, சக பயணிகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்த 5க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மதுராந்தகம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே இந்த புகார் இருந்து வந்தாலும், சமீப காலமாக இது குறித்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து ஆபத்தை உணராமல் படிகளில் பயணம் செய்து வருவதால் பல சமயங்களில் அசம்பாவிதமும் ஏற்பட்டு வருகிறது.
அரசு பேருந்துகளில் மட்டுமில்லாமல் தனியார் பேருந்துகளில், இதுகுறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தனியார் பேருந்துகள் வழக்கத்தை விட மிக வேகமாக செல்வதும், அதிக கூட்டத்தை ஏற்றுவதற்காக தனியார் பேருந்துகளில் மாணவர்களை படிக்கட்டில் நிற்க வைத்து செல்வதும் தொடர்கதை ஆகி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications