சென்னை விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியது.... மத்திய அமைச்சர் ஆய்வு
சென்னை: வெள்ளத்தால் ஒருவார காலம் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இன்று முதல் முழுவீச்சில் இயங்க தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விமான நிலையத்தை மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ இன்று பார்வையிட்டார்.
சென்னையை புரட்டிப் போட்ட கனமழை விமான நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. சென்னை விமான நிலைய ஓடுபாதையும் பல அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது.

மேலும் பல விமானங்களை குப்பைகளைப் போல வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போய் எங்கெங்கோ போட்டது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து தற்காலிகமாக பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் இன்று காலை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தை மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ இன்று ஆய்வும் நடத்தினார்.
ஜெ.வுடன் கஜபதி ராஜூ சந்திப்பு
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவையும் தலைமைச் செயலகத்தில் கஜபதி ராஜூ இன்று சந்தித்தார். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார் கஜபதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications