மீனம்பாக்கத்தில் 28 ஆவது முறையாக இடிந்து விழுந்த மேற்கூரை- பயணிகள் அவதி!
மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 28 ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்கள் கட்டப்பட்டன.

2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
உடைந்து விழும் கண்ணாடிகள்:
ஆனாலும் இந்த விமான நிலையங்களில் கண்ணாடிகளும், மேற்கூரைகளும் அடிக்கடி தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.
பாதிப்பு எதுவும் இல்லை:
இந்த 2 ஆண்டுகளில் இதுவரை 8 முறை மேற்கூரைகளும், 7 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துள்ளன. இதுவரை எந்த பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மீண்டும் இடிந்து விழுந்த மேற்கூரை:
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகை பகுதியில் உள்ள குடியுரிமை சோதனை செய்யும் இடத்தில் உள்ள மேற்கூரை நேற்று இடிந்துவிழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த பகுதிகளை அகற்றினார்கள்.
காயம் ஏதும் இல்லை:
மேலும் அப்போது பிரான்ஸ்சில் இருந்து டெல்லி வழியாக பயணிகள் வந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பயணிகளிடம் பரபரப்பு:
விமான நிலையத்தில் 28 ஆவது முறையாக மேற்கூரை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications