சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் கிடைத்த முக்கிய துருப்புச்சீட்டு: புதிய கோணத்தில் விசாரணை
சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய துருப்புச்சீட்டு கிடைத்துள்ளதையடுத்து போலீசார் புதிய கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 1ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி என்ற இளம்பெண் பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரிசு
சென்னை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் வந்து நின்ற 9வது பிளாட்பாரமில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் அதனால் ஒரு பலனும் இல்லை என்று கூறப்படுகிறது.

குண்டு
இரண்டு குண்டுகளை மாணவர்கள், இளைஞர்கள் முதுகில் போட்டுச் செல்லும் 2 பைக்குள் வைத்து கவுகாத்தி எக்ஸ்பிரஸின் சீட்டுக்கு அடியில் வைத்து சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று தான் வடமாநிலங்களில் நடந்த சம்பவங்களில் பைக்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

பெங்களூர்
பையை சீட்டுக்கு அடியில் கட்டி வைத்திருப்பதை பார்க்கையில் குண்டுகள் பெங்களூர் ரயில் நிலையத்தில் அல்லது சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே ரயில் நின்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புதிய கோணம்
பைக்குள் குண்டுகளை வைத்ததை முக்கிய துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் புதிய கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாட்னா
சென்னையில் நடந்த குண்டுவெடிப்பும், பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த குண்டுவெடிப்பும் ஒரே மாதிரியான சம்பவம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தகவல்
பாட்னா குண்டுவெடிப்பில் கைதான தீவிரவாதிகளிடம் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதை வைத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications