ஒன்றாக ரயில் ஏறினோம், இரவெல்லாம் பேசினோம், குண்டுவெடிப்பில் போயிட்டாளே: ஸ்வாதியின் தோழி கண்ணீர்
சென்னை: சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் நடந்த குண்டுவெடிப்புகளில் பலியான ஸ்வாதியின் தோழி ரஜிதாவால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி பலியானார், மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் ஸ்வாதியுடன் அவரது தோழியும் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

ரஜிதா
ஸ்வாதியும் அவருடன் பெங்களூர் டி.சி.எஸ். நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த ரஜிதா என்பவரும் நேற்று முன்தினம் மாலை ஒன்றாகத் தான் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் பெங்களூரில் ஏறியுள்ளனர்.

இரவு
இரவு வெகுநேரம் வரை தோழிகள் இருவரும் ரயிலில் பேசிக் கொண்டே வந்துள்ளனர். பேசிப் பேசி இறுதியில் இருவரும் தூங்கிவிட்டனர். ஸ்வாதி அப்பர் பர்த்திலும், ரஜிதா லோயர் பர்த்திலும் தூங்கியுள்ளனர்.

சென்ட்ரல்
ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்ததும் ரஜிதா கண்விழித்து அது எந்த ரயில் நிலையம் என்பதை பார்க்க முயன்றுள்ளார்.

குண்டுவெடிப்பு
ரஜிதா கண்விழித்த பிறகு இருக்கையில் இருந்து எழுந்து சென்றுள்ளார். அப்போது ஏதோ வெடிக்கிற பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மக்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடியுள்ளனர். ரஜிதா நடப்பது என்ன என்பதை உணரும் முன்பே அவரை ரயிலில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

ஸ்வாதி
ரயிலில் இருந்து ரஜிதாவை வெளியேற்றும் முன்பு அவர் திரும்ப வந்து ஸ்வாதியை எழுப்பியுள்ளார். ஆனால் அவர் அசைவின்றி கிடந்துள்ளார்.

உடைமைகள்
காவல் நிலையத்திற்கு சென்று ரஜிதா தனது உடைமைகள் மற்றும் செல்போனை வாங்கியுள்ளார். அப்போது தான் குண்டுவெடிப்பில் பலியானவர் ஸ்வாதி என்பதை அவருக்கு யாரோ தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி
ஸ்வாதியின் மரணச் செய்தி அறிந்த ரஜிதா அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு கவுன்சலிங் அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டு
ஸ்வாதியின் சீட்டுக்கு அடியில் தான் குண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி என்றால் யாரோ ஸ்வாதி படுத்திருந்த அப்பர் பர்த்தில் குண்டுகளை வைத்திருக்க வேண்டும்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications