சென்னையில் கனமழை: புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் நனைந்து சேதம்
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்திற்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் பல்வேறு ஸ்டால்களில் இருந்த புத்தகங்கள் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் பதிப்பாளர்களும் புத்தக ஆர்வலர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னை தீவுத்திடலில் கடந்த 1ம் தேதி 39வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. 10 லட்சம் வாசகர்கள் வரை புத்தகக் கண்காட்சியை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். பல ஆயிரகணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய பலத்த மழையால் சென்னை குளுமையடைந்துள்ளது. அதேசமயத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் நனைந்து நாசமாயின.

கண்காட்சியின் முதல் மற்றும் கடைசி வரிசையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது. சேதமடைந்த புத்தகங்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் சேதமடைந்திருக்கும் என தெரிகிறது. மேற்கொண்டு புத்தகங்கள் சேதமடையாமல் இருக்கவும், புத்தகத்தை பாதுகாக்கவும் அங்குள்ள கடைக்காரர்கள் போராடினார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவும் கனமழை கொட்டியதால், புத்தக கண்காட்சியில் உள்ள கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வளவு ஏற்பாடுகளை செய்தவர்கள் மழைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எதுவும் செய்யவில்லை. அரைமணி நேர மழைக்கே இந்த கதி என்றால் இரவு முழுவதும் மழை பெய்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று பதிப்பாளர்கள் குமுறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய உயிர்மை பதிப்பகம் - உரிமையாளர் மனுஷ்யபுத்திரன், மழை வருமா வெயில் வருமா என நாம் கணிக்க முடியாது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எனவே, இவ்வளவு ஏற்பாடு செய்த பபாசி அமைப்பினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்திருக்கலாம். வரும் காலங்களில் இது போல் நடக்காமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
வரும் காலங்களில் இதுபோன்ற சேதத்தை தவிர்க்க வர்த்தக மையம் போன்ற பாதுகாப்பான இடங்களில் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்பது வாசகர்கள், பதிப்பாளர்களின் கோரிக்கையாகும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications