மார்ச் 8ல் சென்னையில் ஓபிஸ் அணி உண்ணாவிரதம்.. அனுமதி வழங்கியது போலீஸ்!
ஓபிஎஸ் அணி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர். அதற்காக காவல்துரையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி குறித்து பதில் அளிக்காத காரணத்தால் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.

ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று மனு அளித்தனர். அவர்களுடைய மார்ச் 8ஆம் தேதி போராட்டத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இந்தநிலையில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications