ஒரு சொட்டு மழை நீர் கூட பள்ளி வளாகத்தில் தேங்கியிருக்கக் கூடாது.. கலெக்டர் உத்தரவு
பள்ளிகள் வழக்கம் போல் திறக்கும்போது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பள்ளிகள் வழக்கம் போல் திறக்கும் போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சென்னை ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை பெய்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் என ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

இதை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை ஆட்சியர் அன்பு செல்வன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
அதில் பள்ளிகள் வழக்கம்போல் துவங்கும்போது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கவில்லை என உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் நன்கு உள்ளது என்பதையும், வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சான்றளிக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறையுடனும் விழிப்பணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications