ரமணன் சொன்னது பலிச்சுருச்சு – சென்னையில் காலை முதல் கொட்டும் “மழை”யால் குளிர்ந்த மக்கள்!
சென்னை: கோடை வெப்பத்தில் தவித்து வந்த சென்னை மக்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் இன்று காலை முதல் பெய்து வருகின்ற "திடீர்" மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் சற்று குறையத்தொடங்கி இன்று மழை பெய்யத் துவங்கியுள்ளது.

"அக்னி" நட்சத்திரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், காலை முதலே சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. பட்டினப்பாக்கம், சாந்தோம், திருவான்மியூர், அடையாறு, தேனாம்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், "வங்கக்கடல் காற்று மற்றும் அரபிக்கடல் காற்று ஆகியவை ஒன்றாக இணைந்துள்ளது. இதன் காரணமாக மேலடுக்கில் நிலவும் காற்றின் போக்கு மழை பெய்தவற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications