தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, கடலூர், நாகைபட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது
இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கிண்டி, துரைபாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், போரூர், நந்தம்பாக்கம்,சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, விருகம்பாக்கம்,சோழிங்கநல்லூர்,உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது மழைநீர் வடிந்து வருகிறது. சில பகுதிகளில் மட்டும் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் அடித்தது. மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
சென்னையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications