லிப்ட், ஜிம்.. பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன்.. இவர்களை என்ன செய்தாலும் மனசு ஆறாது!
பொது கழிப்பறை, உடற்பயிற்சிக் கூடம், அடுக்குமாடி குடியிருப்பின் மாடி உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளி மாணவியை பலாத்காரம் செய்தனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் 7 மாதங்களாக 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 18 பேர் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. சிறுமியை பொது கழிப்பறை, உடற்பயிற்சிக் கூடம், அடுக்குமாடி குடியிருப்பின் மாடி உள்ளிட்ட இடங்களுக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
சென்னை செகரடேரியட் காலனியைச் சேர்ந்தவர் இந்த 11 வயது சிறுமி. காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். தாய் இல்லதரசி. சிறுமியின் மூத்த சகோதரி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

மருத்துவமனைக்கு அழைத்து
சிறுமி சில காலமாக வயிறு வலியால் அவதிப்பட்டுள்ளார். தனது மூத்த சகோதரியிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

பார்வார்டு
அவரை சோதனை செய்த மருத்துவர் சிறுமியை பலர் பலாத்காரம் செய்துள்ளதைக் கண்டறிந்தார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை அயனாவரம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். இதையடுத்து அவர்கள் இந்த வழக்கை வேப்பேரி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையத்துக்கு பரிந்துரை செய்தனர்.

ஆள் நடமாட்டம்
சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிரவைத்தன. சிறுமி தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று முதலில் பலாத்காரம் செய்துள்ளார்.

கூட்டு பலாத்காரம்
கொஞ்ச நாட்கள் கழித்து வெளியாட்கள் சிலரை அழைத்து சிறுமிக்கு போதை மருந்தும், மதுவும் கொடுத்து பலாத்காரம் செய்தனர். இதையடுத்து பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்து வைத்து இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டினர்.

பொது கழிப்பறை
இந்த விஷயத்தை சிறுமி யாரிடமும் சொல்லாததை அறிந்த ரவி, அந்த குடியிருப்பின் எலக்ட்ரீசியன், பிளம்பர், செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பர் பணி செய்வோர் என 18 பேரை அழைத்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்து வைத்துள்ளதும் தெரியவந்தது. பொது கழிப்பறை, மேல்மாடி, உடற்பயிற்சிக் கூடம் ஆகிய இடங்களிலும் இந்த கேடு கேட்ட கும்பல் சிறுமியை கொண்டு போய் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.

நீதிமன்ற விசாரணை
இதையடுத்து சிறுமி மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீஸார் 18 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 3 பேர் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications