4 பேரின் உயிரைப் பறித்த கட்டடத்தில் விதி மீறலா?.. கலெக்டர் ஆய்வு
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நடந்த இடத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: சென்னை வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

4 பேர் மரணம்
குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் தீ பற்றியுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. அந்த தீ அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு 4 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடும் ஐவர்
5 பேர் காயங்களுடன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி கூறியுள்ளார். அதிகப்படியான புகைமூட்டம் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

தடயவியல் நிபுணர்கள்
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு
சென்னை மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புச் செல்வன், விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆய்வு முடிவை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications