ரூ.1000 கோடி ஒதுக்கிய மோடிக்கு நன்றி.. நிதி மக்களை சென்றடைய அனைத்து கட்சி குழு: கருணாநிதி
சென்னை: சென்னை வெள்ளத்தை நேரில் வந்து பார்வையிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, நிதி மக்களை சென்றடைய அனைத்து கட்சி குழு தேவை என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: மழை,வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளைக் ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை உட்பட தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது.லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து ,உடைமைகளை இழந்து , உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள் . பச்சிளங் குழந்தைகளுக்குப் பால் கூடக் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பைப் பார்க்கும் போது என் கண்கள் குளமாகிப் போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை நேரடியாகக் கண்டதோடு , ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண உதவித் தொகை ரூ940 கோடியுடன் மேலும் ரூ1000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் , மழை , வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக் கூடிய அளவுக்கு பாதிப்புகளைக் ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே தெரிவித்திருந்தவாறு அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைத்து கண்காணித்தால் தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதி முழுமையும் முறையாக பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்குச் சேர்வதை உறுதி செய்ய முடியும் . எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக்கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications